">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நான் காணாமல் போனேனா ? – புஷ்பவனம் குப்புசாமி மகள் விளக்கம் !
நான் காணாமல் போகவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நான் காணாமல் போகவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பாடகராக இருந்துவருகிறார். தம்பதிகள் இருவரும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவர்களது மூத்த மகள் பல்லவி மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இவருக்கும் தங்கைக்கும் நேற்றிரவு சண்டை நடந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கோபித்துக் கொண்டு காரை எடுத்து சென்றவர் இன்னும் வீடு திருபவில்லை என குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல்லவியின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் விசாரணை தாமதமாகி வருகிறது.
இதில் திடீர் திருப்பமாக பல்லவி தனது முகநூல் பக்கத்தில் ‘நான் கடத்தப்பட்டுவிட்டதாகவும், காணாமல் போய்விட்டதாகவும் ஊடகங்களில் பொய்த்தகவல் உலவி வருகிறது. நான் நன்றாக இருக்கிறேன். அது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.