
கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள பகுதி காரக்கோணம். இப்பகுதியில் வசிக்கும் ஆஷிகா என்கிற கல்லூரி மாணவியை அனு என்கிற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக வெள்ளறடா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசாரும் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஆஷிகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அனு, சோடா பாட்டிலுடன் உள்ளே புகுந்து அதை உடைத்து ஆஷிகாவின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் அதே பாட்டிலால் தன்னையும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினவர் வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ஆஷிகாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் அங்கு சென்று அனுவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அனு மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.