சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை வெளிவந்தாலும் இந்த படம் வெற்றி அடைவது உறுதி என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் படம் என்றாலே சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அவர் இயக்கிய முந்தைய படமான சர்க்கார் படத்தில் இடம்பெற்ற ஒரு சில வசனங்களால் அரசியல்வாதிகள் குறிப்பாக அதிமுகவினர் கொதித்தெழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தர்பார் திரைப்படத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றாலும் சசிகலாவை மறைமுகமாக குறிப்பிடும் ஒரு வசனம் இருப்பதாக கூறப்படுகிறது ’பணம் இருந்தால் சிறையில் கைதியாக உள்ளவர்கள் கூட ஷாப்பிங் சென்று வரலாம்’ என்று இந்த படத்தில் இருக்கும் வசனம் சசிகலாவை குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ’தர்பார்’ திரைப்படத்தின் சசிகலா குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து சரியானதுதான் என்று கூறி உள்ளதால் அதிமுக இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது