
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநகரம். சென்னையின் இருண்ட பாகத்தை, ரவுடிகளின் உலகத்தை தோலுரித்து காட்டிய திரைப்படம் என்பதால் அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் துவங்கவுள்ளது.
இப்படத்திற்காக விஜய் சேதுபதி சொந்த குரலில் பேசவுள்ளாராம். மேலும், சஞ்சய் மிஸ்ரா மற்றும் சந்தீப் கிஷன் வேடத்தில் விக்ராந்த மாஷோ நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பை கதைக்களம் என்பதால் ஹிந்திக்கு ஏற்றவாறு கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.