சீக்கிரமே இயக்குனர் ஆகும் ஜெயம் ரவி – கதாநாயகனாக இந்த காமெடி நட்க்கர்தான்!

Published on: October 12, 2020
---Advertisement---

e4c059dad70ea1d544ec81475f68c6b6-1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயம் படத்தின் மூலம் நடிகரான ஜெயம் ரவி, அதன் பின்னர் எம் குமரன், சந்தோஷ் சுப்ரமண்யம், பேராண்மை மற்றும் தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்து இன்று ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் சினிமாவில் இயக்குனராக ஆகவேண்டும் என்பதே அவரின் ஆரம்ப கால ஆசையாக இருந்ததாம். அதனால் எப்படியாவது ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என நினைத்துள்ளாரம்.

அதற்காக ஒரு கதையை உருவாக்கியுள்ள ரவி அதில் கதாநாயகனாக நடிக்க நடிகர் யோகி பாபுவிடம் கேட்டுள்ளாராம். விரைவில் இந்த படம் தொடங்கப்படலாம் என ஜெயம் ரவியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

Leave a Comment