ரஜினியின் ‘தர்பார்’ அதிசயம்-அற்புதம் நிகழ்த்துமா?

Published on: January 9, 2020
---Advertisement---

b2fffa2631e06184865fd2f319ca3401

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் தற்போது 3 காட்சிகள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு முடிந்து விட்டது. இந்த நிலையில் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை ரசித்தாலும் நடுநிலை ரசிகர்கள் முதல் பாதி மட்டுமே நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி படு மோசமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் 200 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் திரைப்படம் போட்ட முதலீட்டையாவது எடுக்குமா? என்று திரையுலக வட்டாரங்களில் பரபரப்பான கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

இருப்பினும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நீண்ட இடைவெளி விடுமுறை இருப்பதாலும், வேறு படங்கள் போட்டிக்கு இல்லாததாலும் கண்டிப்பாக இந்த திரைப்படம் போட்ட முதலீட்டை எடுத்து விடும் என்று விநியோகஸ்தர் வட்டாரங்கள் கூறுகின்றன

இருப்பினும் ரஜினியின் முந்தைய படமான பேட்ட வசூல் மற்றும் முருகதாஸின் முந்தைய படமான சர்க்கார் வசூலை ஏதாவது அதிசயம்-அற்புதம் நிகழ்த்தி முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Comment