பல ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்தித்த நடிகர் மோகன்…

Published on: January 9, 2020
---Advertisement---

4b4cb136beaa7992c910d9926c981e58-1

அப்போது உச்சத்தில் இருந்த ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கு இணையாக இவரின் திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்தது. குறிப்பாக இவரின் திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் காலத்தையும் தாண்டி நிற்கின்றன. இவருக்கு பெண் ரசிகைகளே அதிகம் உண்டு. 90களுக்கு பின் அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. 

இந்நிலையில், சென்னை சென்னை மைலாபூரில் உள்ள நிவேதனம் ஹாலில் அவர்  தனது ரசிகைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார். அவரை சந்திக்க மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் சிரித்த முகத்தோடு அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மோகனை சந்தித்த பலரும் இது தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்தனர்.

Leave a Comment