விஷாலுக்கு வில்லனாக ஆர்யா – புதிய பட அறிவிப்பு

Published on: October 13, 2020
---Advertisement---

6fd91f84985cd6ea3852c41defacbe4e

நடிகர் விஷாலுக்கு இரும்புத்திரை திரைப்படத்திற்கு வெளியான திரைப்படங்கள் எதுவும் வெற்றியை கொடுக்கவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்து வந்த துப்பறிவாளன் 2 திரைப்படமும் பஞ்சாயத்து காரணமாக பாதியில் நிற்கிறது.

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு பின் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் டிக்டாக் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது

Leave a Comment