ட்ரம்ப்பின் கைகளைக் கட்டிய எதிர்க் கட்சியினர் – 30 நாட்களில் அமெரிக்க படைகள் திரும்ப வருமா ?

Published on: January 10, 2020
---Advertisement---

72ff5d15c481309b54d7e3070dcee56f

ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க நினைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக் எதிர்க்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஈரானின் ராணுவ தலைவர் சுலைமானியை அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் மூலம் கொலை செய்ததால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளூம் பதற்றம் உண்டானது. அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியால் மேலும் பதற்றம் அதிகமானது.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் செயல்கள் உள்நாட்டிலேயே பலத்த எதிர்ப்பை சந்தித்தன. இதையடுத்து அமெரிக்க நாட்டின் ஹவுஸ் அவையில் பெரும்பான்மையாக இருக்கும் எதிர்க்கட்சியினர் ட்ரம்புக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர்.

அதன் படி, அமெரிக்காவின் இரு அவைகளான செனட், ஹவுஸ் ஆகியவற்றின் ஒப்புதல் இல்லை என்றால் ஈரானுக்கு எதிரான ராணுவ பிரயோகத்தை முப்பது நாட்களுக்குள் டிரம்ப் நிறுத்த வேண்டும். ஈரானில் இருக்கும் படைகளை திரும்ப பெறவேண்டும் என அந்த் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் மட்டுப்பட்டுள்ளது.

Leave a Comment