‘தர்பார்’ நெகட்டிவ் ரிசல்ட்டால் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்

Published on: January 10, 2020
---Advertisement---

965be7684eb2b781322b6633b760d55f

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் நேற்று வெளியாகி ஒரு சில ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களும் பெரும்பாலான ஊடகங்களில் கலவையான விமர்சனங்களும் வெளிவந்த நிலையில் தற்போது வரும் 16ஆம் தேதி வெளியாக இந்த ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நல்ல ரிசல்டை பெற்றால் பொங்கல் விடுமுறையில் பெருவாரியான வசூலை அள்ளும் என்பதால் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 16ம் தேதிக்கு படக்குழுவினர் ஒத்தி வைத்திருந்தனர்.

ஆனால் தற்போது அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது எனவே அதிக பட்சம் 4 அல்லது 5 நாட்கள் மட்டுமே இந்த படம் தாக்கு பிடிக்கும் என்று விநியோகிஸ்தர்கள் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள. மேலும் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

துரை செந்தில்குமார் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Comment