டெல்லி போராட்டம் ; ஸ்கிரிப்ட் வந்ததும் சொல்லுவாரு : ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்

Published On: December 17, 2019
---Advertisement---

da7cfbf7d178e0fc4b11435d31988b11

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், டெல்லி., அசாம், சென்னை உள்ளிட பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. எனவே, மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து மாணவர்களை தாக்கியதோடு அங்கிருந்த இருக்கைகளை போலீசார் சேதப்படுத்தினர்.  இதற்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் தர்பார் பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், டெல்லி போராட்டம் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி ‘இது சினிமா விழா. இதில் அரசியல் பேச வேண்டாம். வேறு தளத்தில் இதற்கு பதில் சொல்கிறேன்’ எனக்கூறி எஸ்கேப் ஆனார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பிரதிபலித்துள்ளது. ரஜினியை கோழை என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு ஸ்கிரிப்ட் ரெடியாகல.. ரெடி ஆனதும் போயஸ்கார்டன் கேட்ல இருந்து பதில் சொல்லுவார்’ என கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment