
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டங்களை வென்ற ஆரவ், ரித்விகா மற்றும் முகின் ஆகியோர் கூட திரையுலகில் சரியான வாய்ப்புகளை பெற முடியாத நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் மட்டும் நல்ல வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ மற்றும் ’இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’தாராளப் பிரபு’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய ரகசியம் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த ரகசியம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஹரிஷ் கல்யாண் ஜோடியாக தன்யா ஹோப் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’தடம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முக்கிய வேடத்தில் விவேக் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ’விக்கி டோனர்’ என்ற பாலிவுட் சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் என்பது தெரிந்ததே