ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தோனி முழுக்கு ? – பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவிப்பு !

Published on: January 10, 2020
---Advertisement---

ad4f5e53ebaaa1d0f00b5e2710881a3d

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனி  2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுதந்த பெருமைக்குரியவர். இந்நிலையில் கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதன்  பிறகு சர்வதேச போட்டிகளுக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை.

தோனிக்கு வயது 38 ஆவதால் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்து  பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அதில்  ‘ தோனியின் ஓய்வு பற்றி நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம். அவரது டெஸ்ட் வாழ்க்கை ஏற்கனவே முடிந்துவிட்டது. விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஓய்வை அறிவிப்பார். இந்த வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவரது வயதில் அவரால் டி 20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தனது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை அமையும்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment