
தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான தனது உடலை மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். தற்போது அவர் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தலையில் முடி வளர்த்து வருகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. கார்த்தியும் தனது தலை முடியை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்காக ஜெயம் ரவி தனது முடியை இழக்க தயாராகி வருகிறார் எனவும், விரைவில் அவர் மொட்டை தலையுடன் அப்படத்தில் நடிக்கவுள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.