ரஜினி காந்தம் போல் ஈர்க்கிறார் ; அவர் மீதுதான் கண் : நடிகை குஷ்பு ஓபன் டாக்

Published on: January 10, 2020
---Advertisement---

d646651123a456d0de849925739156fe

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்த தர்பார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதன் முறையாக முருகதாஸ்-ரஜினி கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகை குஷ்பு ‘ ரஜினி காந்தம் போல் நம்மை ஈர்க்கிறார். அவர் மீதுதான் கண்கள் இருக்கிறது. அவர் மட்டுமே இந்தியாவின் சூப்பர்ஸ்டார் என்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ரசிகர்களுக்கு தர்பார் பொங்கல் ட்ரீட். முருகதாஸுக்கு நன்றி’ என டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.
தர்பாருக்கு அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தில் குஷ்புவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment