’திரெளபதி’க்கு வாழ்த்து போஸ்டர்: டிரைலருக்கே இப்படி என்றால் படம் வெளியானால்?

Published on: January 10, 2020
---Advertisement---

f5bb4f2de36c110539e94901912ac5d0

சமீபத்தில் வெளியான ’திரெளபதி’படத்தின் டிரைலருக்கு கடும் எதிர்ப்பு வெளியான நிலையில் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

’திரெளபதி’ படத்தின் டிரைலரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து தாக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்படுவதாக ஒரு பிரிவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இன்னொரு பிரிவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் ’திரெளபதி’திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து போஸ்டர் ஒட்டி அதனைப் புகைப்படம் எடுத்துவிட்டு சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிரைலருக்கே இப்படி என்றால் படம் வெளியானால் என்ன நடக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் ’திரெளபதி’திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment