![pasupathi](https://cinereporters.com/wp-content/uploads/2021/09/pasupathi.jpg)
Cinema News
டீ விற்பேனா ரிக்ஷா ஓட்டுவேனா தெரியாது!… 25 வருடங்களுக்கு முன்பு பசுபதி பேசிய வீடியோ…
Published on
By
தமிழ் சினிமாவில் டெராரான லுக்கில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பசுபதி. நாசர் இயக்கிய மாயான் படத்தில் அறிமுகமனார். இவர் தியேட்டர் என அழைக்கப்படும் நடிப்பு பயிற்சி களமான கூத்துப்பட்டறையில் பல வருடம் பயிற்சி பெற்றவர்.
தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தூள் படத்தில் டெரர் வில்லனாக அசத்தியவர். அதன்பின் அதுபோன்ற வேடங்களிலேயே அவர் நடித்து வந்தார். சுள்ளான், விருமாண்டி உள்பட பல படங்களில் டெரரான வில்லனாக நடித்தார். வில்லகுணச்சித்திரம், காமெடி என அனைத்திலும் கலக்கினார்.
சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ரங்கன் வாத்தியாராக அசத்தியிருந்தார். இவர் ஆர்யாவின் சைக்கிள் அமர்ந்து செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக வெளிவந்து வைரலாகியது.
இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘இந்த தியேட்டரில் 15 பேர் இருக்கிறோம். எங்களின் எதிர்காலம் என்னவாகும் என எங்களுக்கு தெரியாது. நான் டீ விற்பேனா.. ரிக்ஷா ஓட்டுவேனா எனக்கு தெரியாது. மற்ற நடிகர்கள் போல் எங்களால் சம்பாதிக்க முடியுமா தெரியாது’ என அவர் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அவர் அப்போது அப்படி பேசியிருந்தாலும் அதன்பின் சினிமாவில் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
#பசுபதி ???????????? pic.twitter.com/enwUKFSCFB
— Second Show (@SecondShowTamil) September 23, 2021
சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்து சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து முன்னேறியவர்தான்...
Dhanush: கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். அவர் தற்போது ராயன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்....
தசாவதாரம் படத்தில் கமலுக்கு உதவியாளர் கேரக்டரில் பாடலாசிரியர் கபிலன் நடித்து இருந்தார். இதுகுறித்து அவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் அந்த...
சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கஷ்டமோ அதேபோல்தான் இசையமைக்க கிடைக்க வாய்ப்பும். ஒரு படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்....
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் உலக அளவில் இதுவரை 600 கோடி ரூபாய் வசூலை...