ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்த நடிகர்.. என்ன நடந்தது தெரியுமா?

Published on: September 24, 2021
raai-lakshmi
---Advertisement---

கடந்த 2005ல் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான ‘கற்க கசடற’ படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். கதாநாயகியாக அறிமுகமானபோது இவரது வயது 16. இப்படத்திற்குப் பின் இவர் பல படங்களில் நாயகியாக நடித்தார்.

இவர நடித்த எந்தப்படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடாததால் தன்னுடைய பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டு படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ள சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

raai lakshmi-01
raai lakshm

இதில் பேசிய ரோபோ சங்கர், ராய் லட்சுமி பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருப்பதற்காகவே அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டேன் என்றார். பின்னர் ராய் லட்சுமி பேச சென்றபோது, போகாதே என்று அவர் கையை பிடித்து இழுத்தார் ரோபோ சங்கர்.

ராய் லட்சுமி பேசும்போது, சிண்ட்ரெல்லா ஒரு திகில் படம். இது வழக்கமான படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். நான் ஏற்கனவே காஞ்சனா மற்றும் அரண்மனை ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தில் நடிக்க தயங்கினேன். ஆனால் இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவத்தும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

robo-sankar
robo sankar

இப்படத்தில் சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்தது மிகவும் சவாலானது. அது மிகவும் கடினமாக இருந்தது. நகைச்சுவை காட்சிகளில் ரோபோ சங்கருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது என்றார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment