விவாகரத்து செய்தி: முதன்முறையாக மனம்திறந்து பேசிய நாக சைதன்யா..!!

Published on: September 24, 2021
samantha-4
---Advertisement---

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர் தமிழில் ‘மாஸ்க்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகையானார்.

இவர் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தபோதே பல முன்னணி இயக்குனர்களின் பட வாய்ப்புகளை தவற விட்டார். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இவர் மறுத்துவிட்டார். அந்த நேரத்தில் இவர் தோல் சிகிச்சை எடுத்ததால் இந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

samantha-3

அந்த படங்களில் நடித்திருந்தால், அப்போதே முன்னணி நடிகையாகியிருப்பார். ஒரு கட்டத்தில் இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்தார். ஆனால், குறுகிய காலத்திலே இவர்கள் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர்.

அதன்பின்னர் கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஏதும் பேசாமல் இருவருமே அமைதிகாத்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் விவாகரத்து செய்திக்குறித்து நாக சைதன்யா பேசியுள்ளார். அவர் பேசியதாவது, விவாகரத்து செய்தி எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.

samantha-01
samantha

இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே ஒரு செய்தியை மறக்கடிக்க புதிதாக இன்னொரு செய்தியை கொண்டுவந்துவிடுகிறார்கள். இன்று ஒரு செய்தி பரபரப்பாக இருந்தால், நாளை வேறொருசெய்தி பரபரப்பாக இருக்கிறது, இதனால் பழையதை எளிதாக மறந்துவிடுகிறார்கள் மக்கள். இந்த புரிதல் வந்தவுடன் நானும் இதுபற்றி கவலைப்படுவதே விட்டுவிட்டேன் என்றார்.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment