தயவுசெய்து இனிமேல் தலைவர் படத்தை முருகதாஸ் எடுக்க வேண்டாம்: ஒரு ரசிகரின் ஆதங்கம்

Published on: January 11, 2020
---Advertisement---

33afdd804087581578fe73b6ec07a428

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்த நிலையில் ஒருசில ஊடகங்கள் வேண்டுமென்றே படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை கேட்டு வாங்கி அதனை ஒளிபரப்பி படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ’தயவு செய்து இனிமேல் முருகதாசை தலைவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும். முதல் பாதி சூப்பராக உள்ளது. ஆனால் இரண்டாம் பாதியை முருகதாஸ் கெடுத்து வைத்திருக்கிறார்’ என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், ‘இந்த படம் ஹிந்திகாரங்களுக்காகஎடுக்கப்பட்டது, தமிழ் படமே அல்ல’ என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகரோ, ‘நான் படம் பார்க்கவே இல்லை தூங்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார் 

இந்த வீடியோ முழுவதிலுமே ’தர்பார்’ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களாக வெளிவந்துள்ளது. நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காகவே ஒரு சிலர் இம்மாதிரி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment