தியேட்டரில் உண்மையாகவே நடந்த ‘தர்பார்’ படக்காட்சி!

Published on: January 11, 2020
---Advertisement---

28b02b040b331b181c0a839bd74e89ec

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளிலும் ஓடி வருகிறது. ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து இந்த படத்தை ஓடவிடாமல் முயற்சித்தாலும் இரண்டே நாட்களில் இந்த படம் ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா தன்னுடைய உறவினர் பெண்ணின் தங்க செயின் தொலைந்து போய் விட்டது என்பதற்காக போலீஸ் அதிகாரியான ரஜினியை அழைத்து அதனை கூறுவார். அப்போது ரஜினி ஒரே ஒரு பாடலில் தங்கசெயினை கண்டுபிடித்து தருவது போல் ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சி தற்போது உண்மையாகவே ஒரு திரையரங்கில் நடந்துள்ளது 

பாபு சினிமா என்ற திரையரங்கத்தில் சமீபத்தில் பெண்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சி முடிந்தவுடன்  இந்த திரையரங்கின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு தங்க செயினின் புகைப்படத்தை பதிவு செய்து  இந்த தங்க செயின் தியேட்டரில் இருந்ததாகவும் இந்த செயினுக்கு உரியவர் தகுந்த ஆதாரங்களை காண்பித்து வாங்கிச் செல்லலாம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது 

இதனை அடுத்து தர்பார் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி உண்மையாகவே திரையரங்கில் நிகழ்ந்ததும், அதனை தியேட்டர் நிர்வாகிகள் மன சாட்சியுடன் நடந்து கொண்டு தங்கசெயினை உரியவரிடம் ஒப்படைக்க இப்படி ஒரு விளம்பரம் கொடுத்து இருப்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Leave a Comment