Connect with us
samantha-6

latest news

வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளாத சமந்தா.. விவாகரத்து உறுதி?

சென்னை பல்லாவரத்து பெண்ணான சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக உள்ளார். ஆரம்பகாலத்தில் இவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. அதன்பின் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அதன் எதிரொலியாக இன்று முன்னணி நடிகையாக உள்ளார்.

ஆரம்ப காலத்தில் வளர்ந்துவரும் நடிகையாக இருந்தபோது பல நடிகர்களுடன் இணைத்து இவர் கிசுகிசுக்கப்பட்டார். கிசுகிசுக்களையெல்லாம் கண்டுகொள்ளாத இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வலம்வந்துகொண்டிருக்கிறது. இதிலும் ஒருபடி மேலே சென்று விவாகரத்துக்குப்பின் சமந்தாவுக்கு ஜீவானம்சமாக நாகசைதன்யா 50 கோடி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வந்தது.

இதையெல்லாம் பொய்யாக்கும் அளவிற்கு கடந்த வாரம் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படம் வெளியாகி வெற்றிபெற்றது. இதற்கு சமந்தா சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து விவாகரத்து செய்தி ஓரளவிற்கு அடங்கியது.

amirkhon

மேலும், நாகார்ஜுனா தனது அப்பாவின் வீடியோ ஒன்றையும் சமுக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு சமந்தா மிக அருமையாக உள்ளது மாமா என பதிலளித்திருந்தார். இந்த சம்பவத்தையடுத்து விவாகரத்து செய்தி வெறும் வதந்திதான் என கூறப்பட்டது.

ஆனால், சில நாட்களுக்கு முன் நாகசைதன்யாவின் பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் நாக சைதன்யா தற்போது ஹிந்தியில் அமீர்கானுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்காக அமீர்கான் ஹைதராபாத்தில் உள்ள நாகசைதன்யா வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.

அந்த நிகழ்ச்சியிலும் சமந்தா கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இவர்களது விவாகரத்து உறுதிதான் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள்.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top