நடிகை சமந்தா நாகசைதன்யா விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. ஆனால், அவர்களோ அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் பண்ணாமல் அவரவர் தங்களது படங்களில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
சமந்தாவின் விவாகரத்துக்கு தி பேமிலி மேன் வெப் தொடரில் நடித்தது தான் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரிடம் பேட்டி ஒன்றில் தி பேமிலி மேன் தொடரில் சமந்தாவின் நடிப்பு எப்படி இருந்தது என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது
அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு காட்சியிலும் சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசித்தேன். வாய்ப்பு கிடைத்தால் எப்போதாவது அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறினார். உண்மையில் சொல்லப்போனால் சமந்தா திருமணத்திற்கு பின்னர் எப்படி மவுஸ் குறையாமல் உச்ச நடிகையாக இருந்தாரோ அதே போன்று தான் விவகாரத்துக்கு பிறகு அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது என கூறலாம்.





