நான் இதற்காகத்தான் அவரை திருமணம் செய்தேன்.. ரஜினி பட நடிகை ஓபன் டாக்!

Published on: October 2, 2021
rajini
---Advertisement---

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. இப்படத்திற்கு முன்னதாகவே இவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

ஆனால், கபாலி படம்தான் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இப்படத்திற்குப் பின் தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெனடிக் டைலர் என்ற இசைக்கலைஞரை கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தான் திருமணம் செய்ததற்கான காரணத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

திருமணம் குறித்து இவர் பேசியதாவது, திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத நான் 8 வருடங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக் டைலர் என்பவரை திருமணம் செய்துகொண்டேன்.

radhika apte
radhika apte

வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் மிக எளிதாக விசா கிடைக்கும் என்கிற ஒரே காரணத்தால் தான் நான் அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணம் செய்துகொண்டாலும் நான் இந்தியாவிலே தொடர்ந்து வசித்து வருகின்றேன்.

எப்போதாவது அவரை சந்திக்க வேண்டும் என தோன்றினால் இங்கிலாந்து சென்று அவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக நான் அவரை பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள், அது உண்மையல்ல. நான் என்னுடைய வேலையை செய்கிறேன், அவர் அவரது வேலையி பார்க்கிறார்’ என கூறியுள்ளார்

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment