என் கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார் – மனம் குமுறிய பவானி ரெட்டி!

Published on: October 5, 2021
pavani reddy
---Advertisement---

இந்திய மாடலும் நடிகையும் தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல் நடிகையுமான பவானி ரெட்டி சின்னதம்பி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நந்தினி கேரக்டரில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த போதிலும் அதன் பின்னர் வேறு எந்த தொடரிலும் அவரை பார்க்கமுடியவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் தவியாய் தவித்த சமயத்தில் செம சர்ப்ரைஸ் ஆக பிக்பாஸ் போட்டியாளராக நுழைந்துள்ளார். தற்போது 33 வயதாகும் பவானி ரெட்டிக்கு அழகு குறையாமல் இளமையாக நல்ல குணத்துடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தனக்கு திருமணம் ஆனதாகவும் தனது கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டதாகவும் கூறி வருத்தமடைந்துள்ளார். தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் கடந்த 2017ல் இறந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பவானி ரெட்டிக்கு மளமளவென ரசிகர்கள் குவிந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்து இன்னும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

Leave a Comment