திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் – தமிழில் புதிய வெப் சீரிஸ்

Published On: December 17, 2019
---Advertisement---

de482f95ac137c1266a43f26113d9c31

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் திருவள்ளுவர் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழின் பிரபல யூட்யூப் சேனலான பிளாக் ஷீப் புதிய வெப் சீரிஸாக திருவள்ளுவர் கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற தொடர் உருவாக உள்ளது. இதில் திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார். அந்த வெப் சீரீஸின் முதல் சீசன் வரும் 2020, பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டியூட் விக்கி என்பவர் இயக்கி வருகிறார்.

சி எஸ் கே அணியில் இடம்பெற்ற ஹர்பஜன் சிங் தனது செந்தமிழ் டிவிட்களால் தமிழக ரசிகர்களை கவர்ந்திழுத்தார். கிரிக்கெட் மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகளின் போது தமிழில் டிவிட் செய்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.Harbhajan singh will act as tiruvalluvar

Leave a Comment