Connect with us

Bigg Boss

”முதல்ல நீங்க மாறுங்க… நாங்க எப்போவோ மாறிட்டோம்” இன்றைய பிக்பாஸின் முதல் ப்ரோமோ…

தனது குடும்பத்தினரே தன்னை புரிந்து கொள்ளாமல் அடித்துத் துன்புறுத்தியதாகவும் கதறியபடியே கூறியுள்ளார். நமிதா மாரிமுத்து கலங்கும் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் உருகிப் போயுள்ளனர். தங்களின் ஆதரவு நமிதாவுக்கே என கொடி பிடித்துள்ளனர்.
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில், வாரத்தின் முதல் டாஸ்க்காக  “ஒரு கதை சொல்லட்டுமா…” கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து உருக்கமாகப் பதிவு செய்து வருகின்றனர். இதில், முதலில் இசைவாணி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி மற்றும் ஸ்ருதி ஆகியோர் தாங்கள் கடந்த வந்த பாதையைக் குறித்துக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் திருநங்கையான நமிதா மாரிமுத்து தான் திருநங்கையாக மாறிய கதையையும் அதனால் பட்ட துன்பங்களையும் அவமானங்களையும் கண்ணீர் மல்கக் கூறி கதறியுள்ளார். நமீதா கூறிய கதையைக் கேட்கும் போது அவரை, கிண்டல் பண்ணவங்க கூட அழுதுடுவாங்க போல என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். பிக்பாஸில் அவர் இருக்கும் நாட்களில் நமீதா ஆர்மி தொடங்கினால் கூட ஆச்சிரியபட தேவையில்லை.
namitha
புரமோவில் நமிதா மாரிமுத்து, ”யாரிடமாவது ஏதாவது குறை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என எங்கள் அம்மா சொல்லி கொடுத்தார்கள். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அடிஅடின்னு அவ்ளோ அடி அடிச்சாங்க.. அடி வாங்கி வாங்கி என் உடம்பே மரத்துப் போயிடுச்சு… இந்த சமுதாயத்துல திருநங்கைகளை எல்லாரும் பாலியல் தொழிலாளியாகவும் பிச்சைக்காரர்களாகவும் தான் பார்க்கிறார்கள். இது எல்லாத்துக்கும் காரணம், அவங்க பெத்தவங்க மட்டும்தான். வேற யாரும் இல்ல. மாறுங்க மாறுங்கன்னு சொல்லாதீங்க.. முதல்ல நீங்க மாறுங்க… நாங்க எப்போவோ மாறிட்டோம்” என கண்ணீருடன் கூறுகிறார்.
நமீதாவின் பேச்சை கேட்ட இமான் அண்ணாச்சி, இசைவாணி மற்றும் பல போட்டியாளர்கள் அழுகின்றனர்.  மேலும், சக போட்டியாளர்கள் அவரை சாதானம் செய்ய முயல்கின்றனர். இன்றை எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் ஆதரவு நமிதாவுக்கே என தெரிவித்து வருகின்றனர்.

 

 

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top