Connect with us

Cinema News

வி.வி.எஸ் பார்ட் – 2 உறுதி… எஸ்.கே இதற்கு செட் ஆக மாட்டார்…!

”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என சிவகார்த்திகேயன் தெரிவித்த நிலையில், அந்த படத்தின் இயக்குனர் பொன் ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 உறுதி அதில் சிவகார்த்திகேயன் தான் இருக்க மாட்டார் என டுவிட் செய்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் வெளியான ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கைக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. சிவகார்த்திகேயன் – சத்தியராஜ் – சூரி ஆகியோர் கூட்டணியில் உருவான இந்த படம் பட்டி தொட்டி இன்றி நகரங்களில் இருப்பவர்களும் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட படமாக அமைந்ததது. அனைவரின் பேவரட் படத்தில் கண்டிப்பாக இந்த படமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இது இளசுகளைக் கவரும் வகையில் இமான் இசையில் பாடல்கள் கேட்கக் கேட்க இனிமையாக அமைந்து இருந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது என உறுதியாக இருப்பதாக, டாக்டர் படத்தின் வெளியிட்டு விழாவில் பத்திரிக்கையாளர்யிடம் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். மேலும், ”இது ஒரு எபிக் மூவி, ஜாலியாக எங்களை மறந்து நாங்களே எடுத்த ஒரு படம். இந்த படத்தைத் திரும்ப எடுக்க முடியாது” எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் பொன் ராம் டுவிட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம், போட்றா வெடிய… #vvs2” என டுவிட் செய்துள்ளது. சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top