Connect with us

Bigg Boss

அந்நியன் மாதிரி மாறி மாறி நடிக்கும் அபிஷேக் ராஜா..! என்னங்க நடக்குது வீட்டுக்குள்ள..!

பிக்பாஸ் வீட்டில் 3வது நாளில் பட்டையைப் பத்தி பேசி தாமரை செல்வியிடம் நல்ல வாங்கி கட்டிக்கிட்ட அபிஷேக் ராஜா, நேற்றைய நாள் தொடக்கத்திலே சின்ன பொண்ணுவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு நெற்றியில் விபூதி அடித்துக் கொண்டார்.

பிக்பாஸ் 5 சீசனில் மாடல்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற பாடகி, யூடியூபர்கள், ஆங்கர், நடிகர், நடிகைகள் என பலதரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 18 போட்டியாளர்களில் அதிகம் பெண் போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் என்றாலே சென்டிமெண்ட், சர்ச்சைகளுக்குப் புகழ்பெற்றது. அது போல இந்த சீசனில் சர்ச்சை பேச்சுக்கு ஆளாகி இருக்கிறார் யூடியூப்பர் அபிஷேக் ராஜா. 3வது நாளில் நாடக கலைஞர் தாமரைச் செல்வி குறித்து ரிவ்யூ கொடுத்த அபிஷேக், “பட்டை அடிச்சிட்டு ஊரை ஏமாத்துறாங்க” என்று கூறியது. பெரும் சர்ச்சை பொருளாக மாறியுள்ளது. தான் கூறியது தவறு காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டு விட்டார்.

எனினும் தனது கடும் உழைப்பால் முன்னுக்கு வந்த நாடக கலைஞர் தாமரைச் செல்வியை இப்படி பேசி விட்டார் என்றும், பட்டை என்பது மதம் சார்ந்த்து என்பதாலும் மத உணர்வைப் புண்படுத்திவிட்டார் என நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர். இந்த நிலையில், அபிஷேக் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை நேற்றைய போட்டியின் தொடக்கத்திலே சின்ன பொண்ணுவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு நெற்றியில் விபூதி அடித்துக் கொண்டார். முதல் நாளில் அந்நியன் போல இருந்தவர், நேற்றைய போட்டியில் அம்பி போல மாறிவிட்டரா என நக்கலடித்து வருகின்றனர்.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top