
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க பல இயக்குநர்கள் முன்வந்த போதும் அதற்கு இளையராஜா அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த படத்தை இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த தகவலை சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். மேலும் இளையராஜா வேடத்தில் நடிக்க பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும் அவர் தனுஷ் தான் என்றும் அவர் கூறி உள்ளார்
எனவே தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர்ராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ’ராஜா தி ஜர்னி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் தமிழ், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் யுவன்சங்கர்ராஜா அந்த விழாவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுIlaiyaraja