எல்லாம் தங்களிடம் குடித்த யானைப்பால்தான் மன்னா!….இயக்குனருக்கு நன்றி சொன்ன சிவா….

Published on: October 11, 2021
sivakarthikeyan
---Advertisement---

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் ‘டாக்டர்’. இப்படம் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். சிலர் இப்படத்தை டைம் பாஸ், ஆவரேஜ் எனக்கூறினாலும் படம் நன்றாக இல்லை என எவரும் கூறவில்லை. மேலும், 7 மாதங்களுக்கு பின் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாகி வருகிறது.

அதோடு, திரைத்துறையை சேர்ந்த பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பாராட்டியிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயனும்‘இதுதான் ஷங்கர் சாரின் பாராட்டை பெற்ற என் முதல் படம்’ என நெகிழ்ந்து நன்றி தெரிவித்திருந்தார்.

doctor movie
doctor movie

இந்நிலையில், வாலி,குஷி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவரும், இந்நாள் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தை பாராட்டி டிவிட் செய்திருந்தார். ‘இப்படி ஒரு கதையை நெல்சன் எப்படி யோசித்தார் என தெரியவில்லை. ஒரு பெரிய ஹீரோவ இதுவரை அவர் செய்யாத கதாபாத்திரத்தில் மாற்றி அதற்குள் ஹீரோயிசத்தையும், பொழுதுப்போக்கு அம்சங்களையும் வச்சி…வாவ்..’என பாராட்டியிருந்தார்.

sj suriya

இதற்கு டிவிட்டரில் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் ‘சார் ஒருத்தர் முதல் காட்சியிலயே படத்தோட கதையவே சொல்லிட்டு படத்த ஆரம்பிச்சு ஹிட் அடிச்சாரு. எல்லாம் அங்க தொடங்கின நம்பிக்கைதான் சார். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்’ என பதிவிட்டுள்ளார்.

விஜய்-ஜோதிகா நடித்த குஷி படத்தில் படத்தின் கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டுதான் எஸ்.ஜே. சூர்யா துவங்குவார். படமும் செம ஹிட். அப்போது அது இயக்குனர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அதைத்தான் சிவகார்த்திகேயன் தற்போது குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment