மீண்டும் சூர்யாவுடன் நடிக்கும் ஜோதிகா? அவரே சொன்ன பதில்!!

Published on: October 12, 2021
jothika
---Advertisement---

தல அஜித் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகை நக்மாவின் உடன்பிறந்த தங்கை ஆவார். வாலி படத்தின் வெற்றிக்குப் பின் பல படங்களில் நாயகியாக இவர் நடித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் தமிழ் சினிமா இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006ல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

surya

திருமணத்திற்குப் பின் நடிப்பதை தவிர்த்து வந்த இவர் சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடித்தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சசிகுமார் ஜோதிகாவின் அண்ணனாகவும், சமுத்திரக்கனி அவரது கணவராகவும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள இதன் டிரைலரை பார்க்கும்போதே கிழக்கு சீமையிலே படம் போன்று தெரிகிறது. இப்படம் வரும் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படம்கூறித்து ஜோதிகா பேசியுள்ளார்.

udanpirappe

அதில், எனது 50வது படமான ‘உடன்பிறப்பே’ தியேட்டரில் வெளியாகாதது வருத்தம்தான். கொரோனா காலம் என்பதால் இப்படம் ஓடிடி-யில் வெளியாகிறது என்றார். மேலும் சூர்யாவுடன் நடிப்பது குறித்த கேள்விக்கு, ‘நல்ல கதையை தேடிக்கொண்டிருக்கிறோம், அமைந்தால் கண்டிப்பாக இருவரும் இணைந்து நடிப்போம்’ என்றார்.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment