இப்போலாம் சோசியல் மீடியா பக்கம் போனாலே நம்ம விஜயோட புதுப்பட அப்டேட்டுகள் தான் வலம் வருது. அந்தளவுக்கு தினமும் ஏதாவது ஒரு தகவல் வந்துகிட்டே இருக்குங்க. இப்போ என்ன தகவல்னு தான கேட்கறீங்க. அது ஒன்னும் இல்லைங்க தளபதி 66 படத்தோட ஷூட்டிங்கே இன்னும் ஆரம்பிக்கல ஆனா அதுக்குள்ள அந்த படத்தோட சாட்டிலைட் உரிமையை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பல கோடிக்கு வாங்கிருக்காங்களாம்.
விஜய் இப்போ நெல்சன் இயக்கத்தில அவரோட 65வது படமான பீஸ்ட் படத்துல நடிச்சுக்கிட்டு இருக்காரு. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க இருப்பதும் அந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதும் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான்.
Also Read
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்குல பிரம்மாண்டமா உருவாக இருக்கு. அதுமட்டு இல்லைங்க விஜய் முதல் முறையா வேற மொழி படத்துல நடிக்கிறாரு. இது ஒரு பைலிங்குவல் படம்ன்றதால இந்த படத்துக்காக மட்டும் விஜய்க்கு சுமார் 120 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்க உள்ளதா ஒரு தகவல் வெளியாகி இருக்கு. விஜய் சம்பளமே 120 கேடினா அப்போ படத்தோட பட்ஜெட் எவ்ளோ கோடி இருக்கும்?

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்போ இந்த படத்தோட சாட்டிலைட் உரிமையை தாங்க சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கி இருக்காங்க. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பிகில், மாஸ்டர் போன்ற படங்களோட சாட்டிலைட் உரிமை சுமார் 50 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ள நிலையில, தளபதி 66 படத்தின் சாட்டிலைட் உரிமை சுமார் 70 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்காத ஒரு படத்தோட சாட்டிலைட் உரிமைக்கு 70 கோடியானு கோலிவுட் வட்டாரம் வாய பிளந்துட்டு இருக்காம். படம் எப்படி இருந்தா என்னங்க விஜய்னு ஒரு பிராண்ட் நேம் இருந்தா போதும்னு நினைக்கிறாங்க போல. ஏன்னா விஜய்னு சொன்னாலே போதுமே அந்த படம் ஹிட்டாகிடும்னு எல்லாருக்குமே தெரியும்.



