அந்த ஊரே வேண்டாம்!.. அதிரடி முடிவெடுத்த நடிகை சமந்தா… பின்னணி என்ன?…

Published on: October 13, 2021
samantha
---Advertisement---

தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் நாக சைத்தன்யாவிடமிருந்து பிரிந்தார். எனவே, ஊடகங்கள் இதுபற்றியே பேசின.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. சமீபத்தில் சமந்தா அதை உறுதி செய்தார். அதன்பின் அவரின் விவாகரத்து பல தகவல்கள் வெளியாகியது.

samantha

ஆனால், அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டார் சமந்தா. தற்போது மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளராம்.

எனவே, இனிமேல் அங்குதான் அவர் தங்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே The Family Man 2 வெப் சீரியஸில் நடித்திருந்தார். தற்போது The Family Man 3-விலும் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதோடு, வேறு சில பாலிவுட் படங்களிலும் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் மும்பையிலேயே தங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், எனக்கு பிடித்த ஊர் ஹைதராபாத் மட்டுமே. அந்த ஊர்தான் எனக்கு எல்லாமே கொடுத்தது. இங்கிருந்து எங்கும் போக மாட்டேன். மும்பையில் வீடு என்பது படப்பிடிப்பின் போது நான் தங்குவதற்கு மட்டுமே. நிரந்தரமாக செட்டில் ஆக அல்ல என தனக்கு நெருக்கமானவர்களிடம் சமந்தா கூறினாராம்.

Leave a Comment