மிஷ்கின் இயக்கத்தில் ஹீரோவாக அந்த நடிகரா?- படம் வேற லெவலில் இருக்குமே

Published on: October 14, 2021
myskin
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கதை சொல்லி இயக்குனர் ‘மிஷ்கின்’. இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் வித்யாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும்.இதன் காரணமாகவே இவர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு.

சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குனராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ என்ற பாடல் வெற்றியடைந்ததையடுத்து இப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

s.j.surya
s.j.surya

இதன் பின்னர் இவர் இயக்கிய அஞ்சாதே படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்குப் பின் இவர் இயக்கிய ‘நந்தலாலா’ படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதன்பின் முகமூடி, யுத்தம் செய், பிசாசு என பல படங்களை இயக்கினார். தற்போது இவர் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தி நடித்துவருகிறார். இதில் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

இந்நிலையில், மிஷ்கினின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கிறாராம். இதில் இன்னொரு நாயகனாக விதார்த் நடிக்க உள்ளாராம். இந்தப்படத்தையும் பிசாசு 2 படத்தை தயாரிக்கும் முருகானந்தம் தயாரிக்க உள்ளாராம்.

vidharth
vidharth

இதில் பணியாற்றும் மற்ற கலைஞர்களை பற்றி ஏதும் தெரியவில்லை. இப்படத்தைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment