நான் யாஷிகாவின் EX தான்… ஒரு பெண்ணால் ஒரு பையன் வளரக்கூடாதா?

Published on: October 14, 2021
Bigg Boss nirup
---Advertisement---

நான் யாஷிகாவின் முன்னாள் காதலன் உண்மையை உரக்க சொன்ன நிரூப்!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்களது கடந்து வந்த பாதை குறித்து சக போட்டியாளர்களிடன் பகிர்ந்துக்கொண்டனர். அதில் பவானி , நமீதா, தாமரைச்செல்வி உள்ளிட்டோரின் கதை பலரையும் சோகத்திற்குள்ளாக்கியது.

இந்நிலையில் நிரூப் பேசிய கடந்துவந்த பாதை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நான் இந்த நிகழ்ச்சியில் நுழைந்தபோது என்னை இங்குள்ள பலரும் யாஷிகாவின் எக்ஸ் பாய்பிரண்ட் வருகிறார் என கிண்டல் செய்தனர். உண்மையில் சொல்லப்போனால் அவளால் தான் நான் இங்கு நின்றுக்கொண்டிருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: நீ பில்லாவா வேணாலும் இருந்திட்டு போ… உன்கூட நான் நடிக்கமாட்டேன் – ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா!

yashika
yashika

எனக்கு மீடியாவில் யாருடைய கான்டெக்ட்டும் இல்லை. அவளுடைய முன்னாள் காதலன் என்று இந்த இடத்தில் கூறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். ஏன் ஒரு பெண்ணால் ஒரு பையன் வளரக்கூடாதா? என கேட்டு அப்லாஸ் அள்ளினார். யாஷிகாவுக்கு நிரூப் லிப்லாக் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=popujgG2MaM

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment