·

சாக்லேட் நடிகருக்கு குடைச்சல் கொடுக்கும் பிரபல நடிகை…..

தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் அந்த நடிகர். பார்க்க மிகவும் ஹேண்ட்ஸமாக இருந்ததாலும், பெண் ரசிகைகள் அதிகம் இருந்ததாலும் அந்த நடிகர் சாக்லேட் பாயாகவே வலம் வந்தார். அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும்…

தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் அந்த நடிகர். பார்க்க மிகவும் ஹேண்ட்ஸமாக இருந்ததாலும், பெண் ரசிகைகள் அதிகம் இருந்ததாலும் அந்த நடிகர் சாக்லேட் பாயாகவே வலம் வந்தார். அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால், இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் காத்திருந்த காலமெல்லாம் இருந்தது. விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக இவரும் ஹிட் கொடுத்து வந்தார். ஆனால் சில பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டு விலகி சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி சரியாக ஓடவில்லை. இதனையடுத்து தன் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறி படங்களில் நடித்தார். அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

எனவே வேறு வழியின்றி பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தன்னுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்த 90களின் கனவு கன்னி நடிகையை நடிக்க வைத்துள்ளார். அதுதான் அவர் செய்த பெரிய தவறு என தற்போது புலம்பி வருகிறாராம்.

அந்த நடிகைக்கு தற்போது மார்க்கெட் இல்லைதான். இருந்தாலும் நடிகை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு படத்தில் எனக்கு இதேபோன்று காட்சி வையுங்கள், அதேபோன்று செய்யுங்கள் என ஏகப்பட்ட டார்ச்சர் செய்து வருகிறாராம். நடிகையின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாக்லேட் நடிகர் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறாராம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *