அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி

Published on: October 16, 2021
nayanthara
---Advertisement---

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி உருவாக்கியுள்ள ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ‘ஊர்குருவி’ என்ற பெயரில் படத்தை தயாரிக்கிறது. கவின் இப்படத்தில் நடிக்கிறார்.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் போடுவதுதான் நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்களின் வழக்கம். இதில் புகழ்பெற்ற உச்ச நடிகையான நயன்தாராவும் விதிவிலக்கல்ல . அண்மையில் நெற்றிக்கண் என்ற படத்தைத் தயாரித்தார்கள். இந்த படத்தை அழகாக ஓடிடியில் நல்ல லாபத்திற்கு விற்று விட்டார்கள் .

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி ‘நெற்றிக்கண்’ படத்தைத் தொடர்ந்து, படங்கள் தயாரிக்க கதைகள் கேட்டு வருகிறது .‌ ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. ஆனால், எப்போது வெளியீடு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இதில் ‘கூழாங்கல்’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகின்றன.

vani bhojan

தற்போது அறிமுக இயக்குநர் அருண் இயக்கவுள்ள அடுத்த படத்தைத் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி தயாரிக்க உள்ளது. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

‘ஊர்குருவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக கவின் நடிக்கவுள்ளார். நாயகியாக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது.

Leave a Comment