சரவணபவன் ஜீவஜோதி பாஜகவில் ஐக்கியம் !

Published On: December 13, 2019
---Advertisement---

708ecffe3cb5c05fedece9f73a6ec2b9

சரவணபவனில் வேலைபார்த்து அதன் உரிமையாளரால் தனது கணவனை இழந்த ஜீவஜோதி தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.

சரவணபவனில் வேலைப்பார்த்து வந்த ஜீவஜோதியை அதன் உரிமையாளர் ராஜகோபால் மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்றார். ஆனால் அதற்கு ஜீவஜோதி ஒத்துக்கொள்ளாததால் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.

இது சம்மந்தமான வழக்கி அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தையல் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வரும் ஜீவஜோதி பாஜக வில் இணைந்துள்ளதாக சொல்லபடுகிறது.

இதுபற்றி விசாரிக்கையில் ஜீவஜோதி பாஜகவில் இணைந்தது உண்மைதான் என்றும் அவரது கணவரின் உறவினரான கருப்பு முருகானந்தம்தான் அவரை பாஜகவில் இணைய வற்புறுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Comment