Connect with us
namitha

Cinema News

திடீர் வெளியேற்றத்திற்கு பிறகு நமீதா போட்ட முதல் பதிவு – மனதை உருக்கும் வீடியோ!

திருநங்கை மாடல் அழகியான நமீதா மாரிமுத்து மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை ஆவார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து பின்னணி பாடகியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

namitha

namitha

அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையும் படைத்தார். அந்த நிகழ்ச்சியில் நேர்மையான குணம், கோபம், சமாதானம் , சண்டை என எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்தி உண்மையாக விளையாடினார்.

இதையும் படியுங்கள்; திடீர் வெளியேற்றத்திற்கு பிறகு நமீதா போட்ட முதல் பதிவு – மனதை உருக்கும் வீடியோ!

குறிப்பாக கடந்துவந்த பாதை டாஸ்கில் ஒரு திருநங்கையாக தான் பட்ட கஷடங்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியது ஆடியன்ஸ் அனைவரையும் மனம் உருக செய்தது. அதனால் அவருக்கு நிறைய ஆதரவும் அதிகரித்தது. ஆனால், திடீரென எந்த காரணமும் சொல்லாமல் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

namitha

namitha

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் நமீதா மாரிமுத்து போட்டுள்ள முதல் பதிவு அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. சாலையோரம் இருக்கும் ஏழை குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கியுள்ளார். அவரின் இளகிய மனதை கண்டு பலரும் நீங்கள் மீண்டும் பிக்பாஸுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர்.

 

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top