Connect with us
samantha

Cinema News

அவர் ஒரு கே (Gay)…. சமந்தா விவாகரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி….

சினிமாவை பொருத்தவரை படங்களில் நடித்து பிரபலமானவர்களைவிட சர்ச்சை கருத்துக்களை பேசி பிரபலமானவர்கள் தான் அதிகம். அவ்வாறு சர்ச்சைக்கு பெயர் போன ஒரு நடிகை என்றால் அது பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மட்டும் தான். இவரை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் இவர் செய்த சம்பவங்கள் அப்படி. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகர்களின் அந்தரங்க தகவல்களை பரப்புதல், அரை நிர்வாண போராட்டம் என இவர் செய்யாத காரியமே கிடையாது. அந்தளவிற்கு பல சிறப்பான மற்றும் தரமான சம்பவங்களை செய்துள்ளார்.

samantha

அந்த வகையில் தற்போது புதிதாக ஒன்றை கூறியுள்ளார். அதாவது நடிகை சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த செய்தி தெரிந்த ஒன்றுதான். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் ஒரு காரணமாக சமந்தாவுக்கும் அவரது ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் என்பவருக்கும் நெருக்கம் இருப்பதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: விஜய் படத்திலிருந்து ஏன் விலகினார் அஜித்?… 24 வருடம் கழித்து வெளியான தகவல்

ஆனால் சமீபத்தில் ப்ரீத்தம் எங்கள் இருவருக்கும் இடையில் எந்த தவறான உறவும் கிடையாது. சமந்தா என் சகோதரி போன்றவர் என விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த விவாகரம் குறித்து ஸ்ரீரெட்டி புதிதாக ஒரு தகவலை கூறியுள்ளார்.

sri reddy

sri reddy

இது தொடர்பாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளதாவது, “சமந்தாவின் விவாகரத்துக்கு அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகல்கார் நிச்சயம் ஒரு காரணமாக இருக்க மாட்டார். ஏனென்றால் அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் (GAY). அதனால் காதல் சர்ச்சைக்கு அவர் பொறுப்பாக மாட்டார்” என கூறிள்ளார். இந்த செய்தி டோலிவுட்டில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top