
ரஜினிக்கு பல வருடங்களாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. செயின் சுமோக்கர் என அழைக்கப்பட்ட அவர் தற்போது சிகரெட் பிடிப்பதையே நிறுத்திவிட்டார்.
இதுபற்றி பி.வாசு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
யார் கூறியும் ரஜினி புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவரே நிறுத்திவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவர் புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை. ஒரு பழக்கம் வேண்டாம் என நமது உடமே நமக்கு சொல்லும். அப்படித்தான் அவரே நிறுத்திவிட்டார். இது இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும். அவர்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை’ என பி.வாசு கூறினார்.