பாலா படத்தில் மற்றொரு இளம் நடிகை…. அய்யயோ கதற விடுவாரே…

Published on: October 19, 2021
director bala
---Advertisement---

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான். ஏனென்றால் பாலா படங்கள் தான் சூர்யாவுக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அந்த வகையில் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பாலா சூர்யாவின் நடிப்பை திறமையாக வெளிக்காட்டி இருப்பார்.

ஆனால் தற்போது இயக்குனர் பாலாவுக்கு கெட்ட நேரம் போல. இறுதியாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு பிரிவுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த காரணத்தால் நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்படி பாலா இயக்கும் படத்தை சூர்யா தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் உள்ளாராம். தற்போது இப்படத்திற்கான வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இயக்குனர் விஜி வசனம் எழுத உள்ளாராம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

aishwarya rajesh
aishwarya rajesh

பாலா இயக்கும் இந்த புதிய படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் அதர்வா பாலா உடன் இணைந்துள்ளார். இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சூர்யா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தற்போது புதிதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக பாலா படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை கடுமையாக வேலை வாங்கிவிடுவார்.  நடிக்க தெரியாதவர்கள் கூட பாலா படத்தில் நடித்தால் வேறு லெவலில் வந்துவிடுவார்கள். சொல்லப்போனால் நடிகர் நடிகைகளை கதற விடுவார் என்பார்கள். ஆனால் ஐஸ்வரயா ராஜேஷ் ஏற்கனவே சிறந்த நடிகை என்பதால் அவருக்கு இது பெரிய கடினமாக இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்

ஏற்கனவே காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலா படத்தில் நடிப்பதால் விருது நிச்சயம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மிகவும் குறுகிய கால படமாக உருவாகும் இப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment