Cinema News
வெப் தொடரில் இறங்கும் நடிகைகள்… காரணம் என்ன?
சமீபகாலமாகவே நடிகைகள் படங்களில் நடிப்பதைவிட வெப் தொடரில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் படங்களில் நடிக்க நான் நீ என போட்டி நடைபெறும் ஆனால் தற்போது வெப் தொடரில் நடிக்கவே போட்டி நிலவி வருகிறது.
கொரோனா சமயத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் பிரபலமானது. அதே போல் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால், வெப் தொடர் எடுக்க தொடங்கினார்கள். தற்போது இதுவே ஒரு டிரண்டாக மாறிவிட்டது போல.
பல முன்னணி நடிகைகள் வெப் தொடரில் களமிறங்கி வருகிறார்கள். அந்த வகையில் முன்னதாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், தமன்னா என பல நடிகைகள் வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. பிருந்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர் தெலுங்கில் உருவாக உள்ளதாம். இருப்பினும், தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்து வெளியிட உள்ளார்களாம்.
இந்த வரிசையில் தற்போது நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார். ஆம் இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய வெப் தொடர் ஒன்றில் அஞ்சலி நடிக்க உள்ளாராம். இந்த வெப் தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரிக்க உள்ளாராம். இந்த வெப் தொடர் தெலுங்கில் உருவாகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளதாம்.
இப்படி தொடர்ந்து நடிகைகள் வெப் தொடர் பக்கம் திரும்ப காரணம் என்ன என்று கேட்டால், பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தான் நடிகைகள் வெப் தொடர் பக்கம் திரும்புவதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி சினிமாவை விட வெப் தொடரில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.