விஜயகாந்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா?… ஸ்டண்ட் மாஸ்டர் கூறிய அதிர்ச்சி தகவல்…..

Published on: October 22, 2021
vijayakanth
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடித்த ஆக்‌ஷன் ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பாணியில் திரைப்படங்களில் நடிக்க துவங்கும் போதே தன்னை சண்டை நடிகராக புரமோட் செய்து கொண்டவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் சண்டை காட்சிகள் அனல் பறக்கும். சண்டை காட்சிகளுக்காகவே இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்து பார்ப்பதுண்டு.

ஆனால், அவரின் கையில் ஒரு பிரச்சனை இருந்தது. அது யாருக்கும் தெரியாது. தமிழ் சினிவில் 60 முதல் 90 வரை பல திரைப்படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்த சண்டை இயக்குனர் ஜூடோ ராமு இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதாவது, அவரின் வலது கை தோள்பட்டை சற்று கீழே இறங்கியிருக்குமாம். எனவே, கையில் பெல்ட் அணிந்து கொண்டுதான் படப்பிடிப்பு காட்சிகளில் விஜயகாந்த் நடிப்பாராம். ஆனாலும், இது ரசிகர்களுக்கு தெரியாத வகையில் விஜயகாந்த் சாமார்த்தியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரின் பல திரைப்படங்களில் சண்டை காட்சிகள் அதிரடியாக இடம் பெற்றிருந்தது.

அதிலும் சண்டை நடிகர்களை காலை தூக்கி உதைத்து அவர் செய்யும் சண்டை காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஒருவேளை கையில் அந்த பிரச்சனை இருந்ததால்தான் அவர் காலை பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்தாரா என தெரியவில்லை.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment