யோ யோ டெஸ்ட் எல்லாம் ஜுஜுபி – ஹர்திக் பாண்ட்யா விலகலுக்கு காரணம் இதுதான் !

Published on: January 14, 2020
---Advertisement---

0a72cb9206f36aabe0588557b5f5357c-2

நியுசிலாந்து ஏ அணிக்கெதிரான தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா தானாகவே விலகிக்கொண்டது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார் ஹர்திக் பாண்டியா. இது அவர் யோ யோ தேர்வுகளில் தேர்வாகவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால் அவர் உடல் இன்னும் முழுவதுமாக குணமாகாததால் அவராகவே போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

முதுகுவலிப் பிரச்ச்னையால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானத் தொடரில்தான் களமிறங்குவார் எனத் தெரிகிறது. மற்றபடி யோ யோ தேர்வெல்லாம் அவருக்கு ஜுஜுபி மாதிரி என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment