ஈவு இரக்கமற்ற அட்டையே நீதான்: ‘மாநாடு’ தயாரிப்பாளரின் அதிரடி டுவீட்

Published on: January 14, 2020
---Advertisement---

94d8d4d6a5f0b0bbd3c7050da4003457-3

தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் பிரச்சனை வெளியான அடுத்த சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வந்துவிடுவதுதான். கோடிக்கணக்கில் பணம் திருடியவனை சைபர் க்ரைம் போலீசார் ஒருசில மணி நேரங்களில் பிடித்துவிடுகிறார்கள். ஆனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க முடியவில்லையா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆனது குறித்து ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியிருப்பதாவது:

அந்த தமிழ் கன்னே நீதானேய்யா.. அந்தக் கன்னு வருடக்கணக்கா எல்லோருடையதையும் சுடும்போது உனக்கு எதுவும் தெரியலை. ஆனா இன்னைக்கு உனக்கு வலிக்குதா?, அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. உங்களுக்கு வந்தா இரத்தமாய்யா… என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கு ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு இன்னொரு டுவீட்டும் அவர் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் கூறியிருப்பதாவது:

அட அண்ணன்களா.. நான் போட்டிருப்பது எங்க அனைத்துத் தயாரிப்பாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிய ஒரு ஈவு இரக்கமற்ற அட்டையைப் பற்றி… உங்க தலைவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லலையே… இதற்கு வக்காலத்து வாங்குவதின் மூலம் நீங்கள் அடுத்தவன் படத்தை லபக்கினவர்களுக்கு துணைபோகிறீர்களா என்ன??

சுரேஷ் காமாட்சியின் இந்த இரண்டு டுவிட்டுக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment