Connect with us
rajinikanth

Cinema News

விருது விழாவில் பஸ் ட்ரைவருக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

rajinikanth

rajinikanth

67வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் விருது வழங்கி கௌரவித்தனர்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், “விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன். அதோடு, என்னுள் இருக்கும் நடிப்பு திறமையை அடையாளம் காட்டி என்னை சினிமாவில் நடிக்க சொல்லி ஊக்குவித்த நண்பர் (பஸ் ட்ரைவர்) பகதூர், அண்ணன் சத்யநாராயணாவுக்கு நன்றி… என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றி….. இந்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள்தான்” என்று அவர் தெரிவித்தார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top