சிவகார்த்திகேயனை நடுத்தெருவில் நிறுத்திய நெல்சன் – நாறடித்த தாயாரிப்பாளர்!

Published on: October 26, 2021
sivakarthikeyan
---Advertisement---

டாக்டர் இயக்குனரை நாறடித்த தயாரிப்பாளர் கே ராஜன்!

விஜய்க்கு அடுத்தபடியாக குழந்தைகளின் பேவரைட் நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து நிற்கிறார். அவரது வளர்ச்சியை கண்டு விஜய்யே மேடை ஒன்றில் பாராட்டி பேசியிருந்தார். நடிப்பு, காமெடி , நடனம் , காதல் என சகலத்தையும் சாதாரணமாக திரையில் வெளிப்படுத்தும் சிவகார்த்தியனுக்கு குடும்ப ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து அண்மையில் அப்படம் வெளியானது. இந்த கொரோனா காலத்தில் எதிர்பார்த்தை விட அதிக லாபம் ஈட்டி வசூலில் வேட்டையாடி வருகிறது டாக்டர் திரைப்படம். இந்நிலையில் இப்படத்தை குறித்து தாயாரிப்பாளர் கே. ராஜன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

doctor
doctor

அப்போது, நல்ல படங்களை பார்க்க மக்கள் தயாராக இருக்கிறார். உதாரணம் இந்த கொரோனா காலத்தில் ஓடிய டாக்டர். நல்ல உள்ளம் கொண்ட தம்பி சிவகார்த்திகேயன், 40 கோடியில் எடுக்கவேண்டிய இப்படம் 60 கோடி ஆகிவிட்டது என கூறி 20 கோடிக்கு பொறுப்பெடுத்து ரிலீஸுக்கு முன்னர் கையெழுத்து போட்டு கொடுத்தார்.

இப்படிதான் இயக்குனர்கள் தயாரிப்பளார்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிடுகிறார்கள். ஒருவேளை படம் ஓடாமல் இருந்தாலோ, சிவகார்த்திகேயன் போல் ஒரு நடிகர் இல்லை என்றால் தயாரிப்பாளர்கள் நிலைமை என்ன ஆகுவது என நெல்சனை கிழித்து தொங்கவிட்டுட்டார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment