Cinema News
அண்ணாத்த படத்திற்கு உதயநிதி போட்ட கண்டிஷன்?…உறைந்து போன தியேட்டர் அதிபர்கள்…
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, இப்படத்தை தியேட்டர்களில் காண ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டரில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை வினியோகம் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
இந்நிலையில், முதல் இரண்டு வாரங்கள் தியேட்டர்களில் வரும் வசூலில் 75 சதவீதத்தை தங்களுக்கு தர வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம் உதயநிதி. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஏனெனில் இது இதற்கு முன் நடைமுறையில் இல்லாத ஒன்று. விஜய் படங்களுக்கே முதல் வார வசூலில் 60லிருந்து 65 சதவீதமும், 2வது வார வசூலில் 30லிருந்து 35 சதவீத பங்கும் தரும் நிலையில், 2 வாரங்களுக்கு வசூலில் 75 சதவீதத்தை தர வேண்டும் என ரெட் ஜெயண்ட் மூவில் கண்டிஷன் போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஏற்கனவே, விஷாலின் எனிமி படத்திற்கு முக்கிய தியேட்டர்களை கொடுக்கக் கூடாது எனவும், 90 சதவீத தியேட்டர்களை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் ரெட் ஜெயண்ட் மூவில் கண்டிஷன் போட்டிருப்பதாக செய்திகள் கசிந்தது.
ஒருபக்கம், அண்ணாத்த படம் சுமார் 550 தியேட்டர்களிலும், ஒரு ஹாலிவுட் திரைப்படம் 150 தியேட்டர்களிலும், எனிமி திரைப்படத்திற்கு அதிக பட்சமாக 200 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில்,அந்த 200 தியேட்டர்களும் அதிகம் வசூல் வராத தியேட்டர்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால், எனிமி படத்தின் தயாரிப்பாளர் அதிருப்தியில் இருப்பதால் தீபாவளி ரேஸிலிருந்து அப்படம் பின் வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனிமி படத்திற்கு 250 தியேட்டர்கள் ஒதுக்கா விட்டால் யாராக இருந்தாலும் நான் எதிர்ப்பேன். அவர்களுக்கு எதிராக நான் போராடுவேன் என எனிமி பட தயாரிப்பாளர் வினோத்குமார் ஒரு ஆடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.